2019-க்கான காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டுப் (Climate Change Performance Index-CCPI) பட்டியலில் ஸ்வீடன் நாடானது மிகவும் சிறப்பான செயல்திறன் கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
CCPI ஆனது உலகின் 90% ஆற்றல் சம்பந்தப்பட்ட CO2 உமிழ்வுக்கு காரணமான 60 நாடுகளின் காலநிலைப் பாதுகாப்பு செயல்திறன்களை மதிப்பீடு செய்கிறது.
CCPI 2019 குறியீட்டில் மொராக்கோ இரண்டாவது இடத்தினையும் அதனைத் தொடர்ந்து லித்வேனியா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
பட்டியலின் கடைசி 5 நாடுகளாக சவுதி அரேபியா, அமெரிக்கா, ஈராக், தென்கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உள்ளன.
உலகளாவிய அளவில் மிகப்பெரிய சூரிய உற்பத்தி ஆலையை விநியோக அமைப்புடன் இணைப்பதற்காக மொராக்கோவானது 2020 ஆம் ஆண்டில் 42% அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை நிறுவும் இலக்கை அடையும் பாதையில் உள்ளது.
காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடானது சர்வதேச காலநிலை அரசியலில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியாகும்.
இது ஜெர்மன் வாட்ச், புதிய பருவநிலை நிறுவனம் மற்றும் ஐரோப்பாவின் பருவ நிலை செயல்திட்ட வலையமைப்பு ஆகியவற்றால் வெளியிடப்படும் ஒரு வருடாந்திர அறிக்கை ஆகும்.
இது உலகளாவிய ஆற்றல் தொடர்பான கார்பன் உமிழ்வுகளில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக பொறுப்புடைய 60 நாடுகளின் பருவநிலை பாதுகாப்பின் செயல்திறனை மதீப்பீடு செய்கிறது.