பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டமானது தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுவரை, இந்தத் திட்டமானது பெருநகர சென்னை மாநகராட்சியில் மட்டுமே செயல்பட்டு வந்தது.
சென்னை முழுவதும் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 32,000 மாணவர்களுக்கு காலை உணவை வழங்குவதற்காக அட்சய பாத்திர அறக்கட்டளையானது மாநில அரசால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
“காலை உணவுத் திட்டமானது” பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அட்சய பாத்திர அறக்கட்டளை ஆகியவற்றால் இணைந்து செயல்படுத்தப் படுகின்றது.