தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தினை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தினைத் தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புனித அன்னாள் பள்ளியில் இந்தத் திட்டத்தினை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த நடவடிக்கையினால் இந்த மாநிலம் முழுவதும் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள 2,23,536 குழந்தைகள் பயனடைவார்கள்.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியன்று காலை உணவுத் திட்டத்தினை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தனர்.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று, இந்த மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவாக்கப் பட்டதுடன், 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் சுமார் 18.50 லட்சம் மாணவர்கள் இந்த முன்னெடுப்பின் கீழ் பயனடைந்தனர்.