கால்நடைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த ஆய்வு
February 8 , 2023 659 days 310 0
இந்த ஆய்வறிக்கையானது PLoS குளோபல் பப்ளிக் ஹெல்த் என்ற இதழில் வெளியிடப் பட்டுள்ளது.
மனிதர்கள் மற்றும் விலங்குகளில் ஏற்படும் நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை அறிவியலாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
ஆனால் 2019 ஆம் ஆண்டில் பூமியில் விற்கப்படும் அனைத்து நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளில் 73% மருந்துகள் உணவுக்காக என்று வளர்க்கப்படும் விலங்குகளில் பயன்படுத்தப் பட்டது.
இந்தியாவில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாட்டு (AMU) அளவானது 2020 ஆம் ஆண்டிலேயே உலகச் சராசரியை விட 43% அதிகமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டது.
இது 2030 ஆம் ஆண்டில் சராசரியை விட 40% அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியாவிற்குள்ளேயே, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் அதிகப் பயன்பாடுகள் உள்ள பகுதிகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல பண்ணை உரிமையாளர்கள் அறுவடை நேரத்தை ஒரு வாரம் என்ற அளவிற்கு குறைக்கச் செய்வதற்காக சிப்ரோஃப்ளோக்சசின் மற்றும் என்ரோஃ ப்ளோக்சசின் எனப்படும் இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது, நுண்ணுயிர் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்காக வேண்டி 2017 ஆம் ஆண்டில் ஒரு ‘தேசிய செயல் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உணவு உற்பத்திக்காக பயன்படுத்தப் படும் அனைத்து விலங்குகளிலும் கொலிஸ்டின் என்ற ஒரு மருந்தினைப் பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்தது.