TNPSC Thervupettagam
July 1 , 2018 2241 days 729 0
  • மத்தியப் பிரதேச அரசு ஒளிச் சித்திரக் கலையில், அஞ்சோலி எலா டேனனின் (78) குறிப்பிடத் தகுந்த பங்களிப்பிற்காக தலைசிறந்த விருதான தேசிய காளிதாஸ் சம்மன் விருதினை வழங்கியுள்ளது.
  • பெண்களின் அடையாளம் மற்றும் மகிமையினை உள்ளார்ந்த மற்றும் உணர்ச்சிப் பூர்வமான அர்த்தமுள்ள சித்திரங்களின் மூலம் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்துவதினை அடையாளம் காட்டுவதற்காக வழங்கப்பட்ட விருது இதுவாகும்.
  • இந்த விருது மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தலைசிறந்த விருதாகும். பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற சமஸ்கிருத எழுத்தாளரான காளிதாசரை நினைவுகூறும் வகையில் பெயரிடப்பட்டது.
  • 1980-ல் முதன்முதலாக இந்த விருது வழங்கப்பட்டது. முதலில் பாரம்பரிய இசை, நடனம், நாடகம் மற்றும் ப்ளாஸ்டிக் கலைகள் ஆகியத் துறைகளுக்காக ஒரு ஆண்டு இடைவெளியில் இந்த விருது கொடுக்கப்பட்டது.
  • 1986-87லிருந்து ஒவ்வோர் ஆண்டும் இந்த நான்குத் துறைகளிலும் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது நான்குத் துறைகளினுள் ஒன்றில் முதன்மையான சாதனைப் படைத்தவருக்கு வழங்கப்படுகிறது.
  • இந்த விருதைப் பெற்ற சில நபர்கள்
    • பண்டிட் ரவிசங்கர்
    • எம்.எப்.வுசைன்
    • பண்டிட் ஜஸ்ராஜ்
    • சம்பூ மித்ரா
    • ஹமீப் தன்வீர்
    • இப்ராஹிம் அல்காஷி மற்றும் பலர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்