1959 ஆம் ஆண்டில் சீனாவுடனான எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த 10 காவல்துறை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
லடாக்கிலுள்ள வெந்நீர் ஊற்றுப் பகுதிக்கு அருகில் இந்த தாக்குதலானது நடைபெற்றது.
லடாக்கின் அக்சாய் சின் பகுதியில் உள்ள வெந்நீர் ஊற்றானது இந்திய-திபெத் எல்லை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 15,000 முதல் 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
காவல்துறை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தியாகத்தினைப் போற்றும் தினமாக இது அனுசரிக்கப்படுகிறது.
உயிர்த் தியாகம் செய்த அனைத்துக் காவல்துறையினருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இந்தத் தினமானது கொண்டாடப் படுகிறது.