காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடியின் பரவல் 2025
January 12 , 2025
4 days
37
- தமிழ்நாட்டில் உள்ள டெல்டா பகுதியில் சம்பா பருவச் சாகுபடியின் பரவல் ஆனது, அதன் முந்தைய ஆண்டு பரப்பளவை விட சுமார் 2.5 லட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளது.
- கடந்த ஆண்டு பதிவான சுமார் 7.27 லட்சம் ஏக்கருடன் ஒப்பிடும் போது, இந்த முறை சம்பா பருவச் சாகுபடியின் பரப்பளவு 9.78 லட்சம் ஏக்கர் ஆகும்.
- அதற்கு இணையான தாளடி பருவத்தைப் பொறுத்த வரை, நடப்பு ஆண்டின் சாகுபடி பரப்பளவு 2022-23 ஆம் ஆண்டில் இருந்ததை விட சுமார் 1.4 லட்சம் ஏக்கர் குறைவாக உள்ளது.
- இதன் விளைவாக, இந்த ஆண்டு சம்பா-தாளடி பருவத்தில் ஒருங்கிணைந்தச் சாகுபடி பரப்பளவின் நிகர அதிகரிப்பு 1.15 லட்சம் ஏக்கராகக் குறைந்துள்ளது.
Post Views:
37