TNPSC Thervupettagam

காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்

February 10 , 2020 1807 days 936 0
  • காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.
  • சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி பூங்காவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் இதனை அறிவித்தார்.
  • இந்த அறிவிப்பானது மாநிலத்தின் அரிசிக் களஞ்சியமான  காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய் ஆய்வு குறித்த திட்டங்களை செயல்படுத்துவதைத் தடுப்பதாகும்.
  • காவிரி டெல்டாப் பகுதியானது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்