தமிழகம் மாநிலத்தில் ஜூலை மாதத்தின் போது காவிரி நதியில் அதிக அளவு நீர் வரத்து பதிவானது என்பதோடு அந்த மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான நதி நீர் ஒதுக்கீடு மட்டுமின்றி மேலும் அதிகமான நீர் வரத்தும் பதிவானது.
ஜூலை 01 முதல் 31 ஆம் தேதி வரையில், இந்த மாநிலத்திற்கு 96.5 ஆயிரம் மில்லியன் கன அடி (TMC) நீர் வரத்து என்பது பதிவானது.
ஜூன் மாதத்தில், நிர்ணயிக்கப்பட்ட 9.19 TMC நீருக்குப் பதிலாக 2.25 TMC நீர் வரத்தினை மட்டுமே தமிழ்நாடு பெற்றது.
மொத்தமாக, கடந்த இரண்டு மாதங்களில், தமிழகம் 40.43 TMC என்ற வழக்கமான நதி நீர் ஒதுக்கீட்டிற்குப் பதிலாக சுமார் 98.8 TMC நீர் வரத்தினைப் பெற்றுள்ளது.
ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு 31.24 TMC நீரும், ஆகஸ்ட் மாதம் 45.95 TMC நீரும் வழங்கப் பட வேண்டும்.
காவிரி நதிநீர்ப் பிரச்சினை தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உச்சநீதிமன்றம் மாற்றியமைத்தபடி, ஜூன் மாதம் முதல் ஒரு நீர் வழங்கீட்டு ஆண்டில் தமிழகத்திற்கு 177.25 TMC நீர் கிடைக்க வேண்டும்.