தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்சனைகளை களைவதற்காக மத்திய அரசானது காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை (Cauvery Water Management Authority -CMA) அமைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினால் திருத்தியமைக்கப்பட்டவாறு காவிரி நதிநீர் பிரச்சனை தீர்ப்பாயத்தின் (Cauvery Water Disputes) முடிவுகளுக்கு அமல்பாட்டு விளைவுகளைத் தருவதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவை (Cauvery Water Regulation) அமைக்கத் திட்டம் (ஸ்கீம்) ஒன்றை மத்திய நீர் வள ஆதார அமைச்சகம் (Ministry of Water Resources) வகுத்துள்ளது.
இந்த காவிரி நதிநீர் ஆணையமானது ஓர் தலைவர், எட்டு உறுப்பினர்கள் மற்றும் ஓர் செயலாளரைக் கொண்டதாகும்.
இந்தக் எட்டு உறுப்பினர்களுள் இருவர் முழு நேர உறுப்பினராவர். மற்றுமொரு இருவர் பகுதிநேர உறுப்பினர்களாவர். 4 பேர் 4 மாநிலங்களைச் சேர்ந்த பகுதி நேர உறுப்பினர்களாவர்.
இந்த ஆணையமானது தண்ணீர் வருடத்தின் (water year) தொடக்கத்தில் (ஆண்டு தோறும் ஜூன் 1 ஆம் தேதி) குறிப்பிடப்பட்ட நீர்த்தேக்கங்களில் மொத்த மீத தண்ணீர் தேக்கிவைப்பு அளவினை தீர்மானிக்கும்.