காவேரி நதிப் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் நீரியல் நிலை
December 13 , 2023 348 days 306 0
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்விக் கழகத்தின் (IISc) அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் “காவிரி நதி: நில பயன்பாட்டு இயக்கவியல், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் நீரியல் நிலை” என்ற தலைப்பிலான கட்டுரையினை வெளியிட்டு உள்ளனர்.
1965 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில் காவிரிப் படுகையில் சுமார் 12,850 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காணப்பட்ட இயற்கைத் தாவரங்கள் அழிந்து விட்டன.
காவிரி நதிப் படுகையில் அமைந்த மற்ற மாநிலங்களை விட கர்நாடக மாநிலம் அதிகளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளது.
கர்நாடகம் இழந்துள்ள நிலப்பரப்பு, மொத்தமாக அழிந்த நிலப்பரப்புகளின் நான்கில் மூன்று பங்காகும் என்ற நிலையில், அழிந்த நிலப்பரப்புகளில் தமிழ்நாட்டில் அமைந்த பகுதிகளின் பங்கு ஐந்தில் ஒரு பங்காகும்.
இந்த ஆண்டுகளில் இயற்கைத் தாவரங்களின் பரப்பளவு சுமார் 46% குறைந்துள்ளது.
அடர்ந்தத் தாவரப் பரவலின் குறைவு அளவு 35% (6,123 சதுர கிமீ) மற்றும் சிதைந்த தாவரப் பரவல் 63% (6,727 சதுர கிமீ) ஆகும்.
1928 ஆம் ஆண்டில் 6,556 சதுர கிலோமீட்டராக இருந்த நீர்ப்பாசனப் பரப்பளவு தற்போது 20,233 சதுர கிலோமீட்டராக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் 1,193 சதுர கி.மீ ஆக இருந்த நீர்ப்பாசனப் பரப்பளவு 8,497 சதுர கி.மீ. ஆக உயர்ந்துள்ளதால் இரு மாநிலங்களுக்கும் தண்ணீர்த் தேவை அதிகரித்துள்ளது.