TNPSC Thervupettagam

காவேரி நதிப் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் நீரியல் நிலை

December 13 , 2023 219 days 250 0
  • பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்விக் கழகத்தின் (IISc) அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் “காவிரி நதி: நில பயன்பாட்டு இயக்கவியல், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் நீரியல் நிலை” என்ற தலைப்பிலான கட்டுரையினை வெளியிட்டு உள்ளனர்.
  • 1965 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில் காவிரிப் படுகையில் சுமார் 12,850 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காணப்பட்ட இயற்கைத் தாவரங்கள் அழிந்து விட்டன.
  • காவிரி நதிப் படுகையில் அமைந்த மற்ற மாநிலங்களை விட கர்நாடக மாநிலம் அதிகளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளது.
  • கர்நாடகம் இழந்துள்ள நிலப்பரப்பு, மொத்தமாக அழிந்த நிலப்பரப்புகளின் நான்கில் மூன்று பங்காகும் என்ற நிலையில், அழிந்த நிலப்பரப்புகளில் தமிழ்நாட்டில் அமைந்த பகுதிகளின் பங்கு ஐந்தில் ஒரு பங்காகும்.
  • இந்த ஆண்டுகளில் இயற்கைத் தாவரங்களின் பரப்பளவு சுமார் 46% குறைந்துள்ளது.
  • அடர்ந்தத் தாவரப் பரவலின் குறைவு அளவு 35% (6,123 சதுர கிமீ) மற்றும் சிதைந்த தாவரப் பரவல் 63% (6,727 சதுர கிமீ) ஆகும்.
  • 1928 ஆம் ஆண்டில் 6,556 சதுர கிலோமீட்டராக இருந்த நீர்ப்பாசனப் பரப்பளவு தற்போது 20,233 சதுர கிலோமீட்டராக உயர்ந்துள்ளது.
  • கர்நாடகாவில் 1,193 சதுர கி.மீ ஆக இருந்த நீர்ப்பாசனப் பரப்பளவு 8,497 சதுர கி.மீ. ஆக உயர்ந்துள்ளதால் இரு மாநிலங்களுக்கும் தண்ணீர்த் தேவை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்