TNPSC Thervupettagam

காவேரி வனவிலங்குச் சரணாலயத்தில் வெள்ளை சம்பார் மான்

September 15 , 2023 441 days 289 0
  • காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் 'வெள்ளை' சம்பார் மான் (கடமான்) இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • காவேரி வனவிலங்குச் சரணாலயத்தின் சங்கமா பகுதியில் லூசிஸ்டிக் (தோல் வெளிர்ந்த) சாம்பார் மான் இருப்பதாக பதிவாகியுள்ளது.
  • இந்த நிலப்பரப்பில் வெள்ளை நிற சம்பார் மான் இருப்பதற்கான முதல் ஆதாரப் புகைப்படப் பதிவு இதுவாகும்.
  • லூசிசம் (தோல் வெளிர்தல்) என்பது விலங்குகளின் தோலில் உள்ள நிறமி இழப்பினால் வெள்ளை நிற அல்லது வெளிர் தோல் கொண்டு காணப்படும் நிலையாகும்.
  • இந்த நிலையானது விலங்கின் வளர்ச்சியில் உள்ள குறைபாட்டால் உருவான புறத் தோற்றம் (ஒரு உயிரினத்தின் பண்பு) காரணமாக இயற்கையாகவே பிறப்பிலிருந்தே ஏற்படலாம்.
  • இது விலங்குகளின் தோலில் மெலடோனின் என்ற இல்லாததால் ஏற்படும் ஒரு நிலையான வெண் தோல் குறைபாட்டிலிருந்து (அல்பினிசம்) வேறுபட்டது.
  • இந்த விலங்குகள் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற கண்களைக் கொண்டுள்ளது.
  • ஆனால் தோல் வெளிர்தல் கொண்ட விலங்குகள் இளஞ்சிவப்பு கண்களைக் கொண்டு இருக்காது.
  • இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டில் வெள்ளை சம்பார் மான் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்