TNPSC Thervupettagam

காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலை

August 12 , 2019 1839 days 688 0
  • சரத்து  370ஐ ரத்து செய்வது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக் கூறிய ஐக்கிய நாட்டின் முதல் நிரந்தர உறுப்பினர் நாடாக ரஷ்யா மாறியுள்ளது.
  • அமெரிக்கா, ஐ.நா சபையை அடுத்து ரஷ்யாவும் இப்போது காஷ்மீரின் நிலையை மோசமடைய அனுமதிக்கக் கூடாது என இந்தியா மற்றும் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டுள்ளது.
  • 1972 ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 ஆம் ஆண்டின் லாகூர் பிரகடனத்தின் விதிகளின் படி இருதரப்பினருக்கும் இடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்பட வேண்டுமெனவும் ரஷ்யா கூறியுள்ளது.
  • 1971 ஆம் ஆண்டின் போர்க் காலத்தையும் சேர்த்து எப்போதெல்லாம்  ஐ.நா. பாதுகாப்பு சபையில் காஷ்மீர் குறித்த தீர்மானம் அறிமுகப் படுத்தப்பட்டதோ அப்போதெல்லாம் முன்னாள் சோவியத் ஒன்றியமானது இந்தியாவிற்கு உதவியாக இருந்தது.
  • ஐ.நா. பாதுகாப்பு சபையில் 100-வது வெட்டு (தடுப்பு) வாக்களிப்பானது மாஸ்கோவால் 1962 ஆம் ஆண்டில் காஷ்மீரின் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தது.
  • இதற்கு முன்னதாக 1957 ஆம் ஆண்டில் இதே விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் ஒரு தீர்மானத்திற்கு ரஷ்யா தடுப்பு வாக்களித்து இந்தியாவிற்குப் பிணையளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்