TNPSC Thervupettagam
April 26 , 2021 1219 days 598 0
  • நாசா சமீபத்தில் காஸ்மிக் ரோசின்” (அண்டங்களில் ரோஜா வடிவ அமைப்பு) புகைப்படத்தை வெளியிட்டது.
  • காஸ்மிக் ரோஸ் என்பது நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி எடுத்த ஒரு புகைப்படமாகும்.
  • ArP 273 என்ற அண்டங்களின் ஊடாக ஏற்படும் இடைவினைகளை இப்படம் பிரதிபலிக்கிறது.

ArP 273

  • இது ஆண்ட்ரோமேடா விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளது.
  • இது புவியிலிருந்து 300 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
  • இது UGC 1810 மற்றும் UGC 1813 ஆகிய சுருள் வடிவ அண்டங்களின் ஒரு தொகுப்பாகும்.
  • UGC 1810 ஆனது UGC 1813 என்பதை விட 5 மடங்கு கனமானதாகும்.
  • UGC 1810 அண்டமானது ரோஜா வடிவில் உருமாறிய ஒரு தட்டினைக் கொண்டுள்ளது.
  • இச்சிதைவானது UGC 1813 அண்டத்தின் கீழமைந்த ஈர்ப்பு விசையின் காரணமாக ஏற்பட்டது.
  • இது ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியினால் புகைப்படமெடுக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்