TNPSC Thervupettagam

கிகாலி திருத்தம்

September 29 , 2022 663 days 360 0
  • அமெரிக்க மேலவையானது கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக சர்வதேசப் பருவ நிலை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • குளிர்பதனப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டும் சாதனங்களில் பொதுவாகக் காணப் படும் புவி வெப்பமயமாக்கலுக்குக் காரணமான தொழில்துறை இரசாயனங்களைப் பயன்படுத்துவதை இந்த ஒப்பந்தம் படிப்படியாக நீக்க முயல்கிறது.
  • கிகாலி ஒப்பந்தம் என்பது பூமியின் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தமான மாண்ட்ரீல் நெறிமுறையின் 2016 ஆம் ஆண்டு திருத்தமாகும்.
  • தற்போது, ஹைட்ரோபுளோரோ கார்பன்கள் அல்லது HFCகளின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் கடுமையாகக் குறைப்பதற்கு ஒப்புக் கொண்ட 137 பிற நாடுகளுடன் சேர்ந்து, 2016 கிகாலி திருத்தத்தில் அமெரிக்க நாடும் இணைந்துள்ளது.
  • இந்த இரசாயனங்கள் ஆற்றல்மிக்க பசுமை இல்ல வாயுக்களாக இருப்பதால், கார்பன் டை ஆக்சைடை விட 1,000 மடங்கு வெப்பப் பிடிப்புத் திறனைக் கொண்டுப் புவியை அதிகமாக வெப்பமாக்குகிறது.
  • கிகாலி ஒப்பந்தம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப் பட்டால், இந்த நூற்றாண்டின் இறுதியில் 0.5 டிகிரி செல்சியஸ் அல்லது தோராயமாக 1 டிகிரி பாரன்ஹீட் வெப்ப மயமாதலை அது தடுக்கும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்