TNPSC Thervupettagam

கிகாலி திருத்தம்

August 23 , 2021 1064 days 615 0
  • ஓசோன் அடுக்கினைப் பாதுகாப்பதற்காக 1989 ஆம் ஆண்டின் மாண்ட்ரியல் கோட்பாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட கிகாலி திருத்தத்தினை இந்தியா சமீபத்தில் அங்கீகரித்துள்ளது.
  • கிகாலி திருத்தத்தின் கட்டமைப்பு நாடுகளுள் ஒன்றாக இருந்த போதிலும் அதனை அங்கீகரிப்பதற்கான தனது முடிவை அறிவித்த கடைசி நாடு இந்தியா ஆகும்.
  • மாண்ட்ரியல் கோட்பாட்டில், ஹைட்ரோ ஃபுளூரோ கார்பன்களை நீக்குவது குறித்த கிகாலி திருத்தத்தை மேற்கொள்வதற்காக ருவாண்டாவில் பேச்சுவார்த்தை (2016) மேற்கொள்ளப் பட்டது.
  • இந்தத் திருத்தத்தின் கீழ், மாண்ட்ரியல் கோட்பாட்டின் கீழான கட்டுப்படுத்தப்பட்ட வாயுக்கள் எனும் பட்டியலில் ஹைட்ரோ ஃபுளூரோ கார்பனையும் சேர்ப்பதற்கு உலக நாடுகள் ஒப்புக் கொண்டன.
  • இந்தத் திருத்தத்தின் கீழ், ஹைட்ரோ ஃபுளூரோ கார்பனின் பயன்பாடானது 2050 ஆம் ஆண்டுக்கு முன் 85% வரைக் குறைக்கப்பட வேண்டும்.
  • இந்திய நாடானது இந்த இலக்கை 2047 ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும்.
  • வளர்ச்சியடைந்த நாடுகள் 2036 ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கினை அடைதல் வேண்டும்.
  • சீனாவிற்கு 2045 ஆம் ஆண்டானது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்