TNPSC Thervupettagam

கினியா புழு நோய் ஒழிப்பு

February 28 , 2024 142 days 247 0
  • கினியா புழு நோயை ஒழிப்பதற்கான இலக்கினை உலக நாடுகள் நன்கு நெருங்கி வருகின்றன.
  • 1980 ஆம் ஆண்டுகளில் 3.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • உலக சுகாதார அமைப்பின் வாராந்திரத் தொற்றுநோயியல் அறிக்கையின்படி, இந்த நோய்ப் பாதிப்புகளானது 2021 ஆம் ஆண்டில் 14 ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 13 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் வெறும் 6 ஆகவும் குறைந்துவிட்டன.
  • டிராக்குன்குலியாசிஸ் என்றும் அழைக்கப்படுகின்ற கினியா புழு நோய் ஆனது கினியா புழுவால் (டிராகுங்குலஸ் மெடினென்சிஸ்) ஏற்படுகின்றது.
  • 90 சதவீதத்திற்கும் அதிகமான கினியா புழு நோய்த்தொற்றுகள் கால்கள் மற்றும் பாதங்களில் ஏற்படுகின்றன.
  • இந்திய நாடானது 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இந்த நோயை முற்றிலுமாக ஒழித்ததையடுத்து, 2000 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் நரம்பு சிலந்தி நோய்த் தொற்று இல்லாத நாடு என்ற சான்றிதழைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்