கினியா புழு நோயை ஒழிப்பதற்கான இலக்கினை உலக நாடுகள் நன்கு நெருங்கி வருகின்றன.
1980 ஆம் ஆண்டுகளில் 3.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் வாராந்திரத் தொற்றுநோயியல் அறிக்கையின்படி, இந்த நோய்ப் பாதிப்புகளானது 2021 ஆம் ஆண்டில் 14 ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 13 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் வெறும் 6 ஆகவும் குறைந்துவிட்டன.
டிராக்குன்குலியாசிஸ் என்றும் அழைக்கப்படுகின்ற கினியா புழு நோய் ஆனது கினியா புழுவால் (டிராகுங்குலஸ் மெடினென்சிஸ்) ஏற்படுகின்றது.
90 சதவீதத்திற்கும் அதிகமான கினியா புழு நோய்த்தொற்றுகள் கால்கள் மற்றும் பாதங்களில் ஏற்படுகின்றன.
இந்திய நாடானது 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இந்த நோயை முற்றிலுமாக ஒழித்ததையடுத்து, 2000 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் நரம்பு சிலந்தி நோய்த் தொற்று இல்லாத நாடு என்ற சான்றிதழைப் பெற்றது.