கி.மு. 800 காலகட்டத்தினைச் சேர்ந்த சங்க காலம் - தொல்லியல் கண்டுபிடிப்பு
February 12 , 2023 655 days 510 0
சமீபத்திய அறிக்கையில், தொல்லியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சங்க காலம் ஆனது கி.மு.800 என்ற காலத்தினைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சியினை மேற்கொண்ட கே அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான ஆய்வுக் குழுவானது, இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநரான வி வித்யாவதியிடம் முதல் இரண்டு கட்டங்களின் போது மேற்கொள்ளப் பட்ட தனது 982 பக்க அறிக்கையைச் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது.
முதல் இரண்டு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்டப் பண்பாடு சார்ந்தப் படிமங்களின் பாறைப் படிவியல் முடிவுகளின் அடிப்படையில், இந்த சங்க காலத் தொல்பொருள் தளத்தின் காலம் ஆனது கி.மு. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலானதாகக் கூறப்படுகிறது.
சங்க காலம் ஆனது கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை தொடர்ந்ததாக இது வரை நம்பப் பட்டது.
இந்தப் புதிய அறிக்கையானது சங்க காலத்தினைக் கி.மு. 800 முதல் கி.பி. 300 வரையிலான காலத்தினைச் சேர்ந்ததாக மாற்றியமைக்கிறது.
மேலும் வரலாற்றின் இந்தக் காலகட்டமானது, மூன்று காலகட்டங்களாக வகைப் படுத்தப் பட்டுள்ளது.
கி.மு. 800 முதல் கி.மு. 500 வரையிலான காலம் - வரலாற்றுக்கு முந்தைய காலம்
கி.மு. 500 முதல் கி.மு. 1 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான காலம் - நன்கு வளர்ச்சி பெற்ற ஆரம்பகால வரலாற்றுக் காலம்
கி.மு. 1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 300 வரையிலான காலம் ஆரம்பகால வரலாற்றிற்குப் பிந்தைய காலம்
கீழடி என்பது தமிழ்நாட்டின் மதுரை நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு குக்கிராமமாகும்.