TNPSC Thervupettagam

கிம்பர்லி சான்றளிப்புத் திட்டம் - இந்தியா

December 23 , 2017 2401 days 784 0
  • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற கிம்பர்லி செயல்முறையின் வருடாந்திர அமர்வில் (Kimberly Process Plenary Session) கிம்பர்லி செயல்முறை சான்றளிப்பு திட்டத்தின் செயல்முறையின் (Kimberley Process Certification Scheme) சீர்திருத்தத்திற்கான தற்காலிக மதிப்பாய்வு மற்றும் சீர்திருத்தக் குழுவின் (Ad HOC Committee on Review & Reform) தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இக்குழுவின் துணைத் தலைவராக அங்கோலா நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
  • 2016 நவம்பரில் துபாயில் கடைசியாக நடைபெற்ற கிம்பர்லி வருடாந்திர கூட்டமர்வில் கிம்பர்லி செயல்முறையின் 2018 ஆம் ஆண்டிற்கான துணைத் தலைவராகவும், 2019ஆம் ஆண்டிற்கான தலைவராகவும் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • 2018ஆம் ஆண்டிற்கான தலைவராக ஐரோப்பிய யூனியன் உள்ளது.
  • கிம்பர்லி செயல்முறை சான்றளிப்பு திட்டத்தின் (KPCS – Kimberly Process Certification Scheme) நிறுவன நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகும்.
  • தற்போது KPCSல் 28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியனோடு சேர்ந்து 81 நாடுகளைச் சேர்ந்த 54 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வர்த்தக துறையின் மூலம் இந்தியாவில் இத்திட்டம் நிர்வகிக்கப்படுகிறது.
  • சான்றளிப்பு (Certification) இல்லாத வைரங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை முற்றிலுமாக KPCS தடை செய்கிறது.
  • சட்டப்பூர்வமான அரசாங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் போரினிற்கு நிதி திரட்டுவதற்காக புரட்சிக் குழுக்களால் பயன்படுத்தப்படும் கடினமான, வைரத் தயாரிப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படாத சட்ட விரோத வைரங்களின் கை மாறுதலை தடுப்பதற்காக உண்டாக்கப்பட்ட, சர்வதேச வைர நிறுவனங்கள், பல்வேறு நாடுகளின் அரசுகள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றிற்கிடையேயான கூட்டிணைவே கிம்பர்லி செயல்முறை (Kimberly Process) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்