TNPSC Thervupettagam

கியூபாவின் புதிய அதிபர்

May 1 , 2018 2400 days 733 0
  • கியூபா நாட்டின் அதிபராக மிகுயெல் டையஸ்-கேனெல் (Miguel Díaz-Canel) அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • அண்மையில் கியூபாவின் தேசியப் பேரவையில் (National Assembly) அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

  • அண்மையிலான 60 ஆண்டுகளில், கேஸ்ட்ரோ (Castro) எனும் பெயரில்லாத ஒருவரால் கியூபா வழிநடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.
  • 2006-ஆம் ஆண்டு கியூபாவின் அதிபராக பதவியேற்ற ரவூல் கேஸ்ட்ரோவினை (Raul Castro) பதில் மாற்றம் செய்ய தற்போது கியூபாவின் முதல் துணை அதிபரான மிகுயெல் டையஸ்-கேனெல் கியூபா தேசியப் பேரவையால் கியூபாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்ட்டுள்ளார்.
  • இருப்பினும் ரவூல் கேஸ்ட்ரோ கியூபாவினுடைய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராகவும், கியூபாவின் தேசிய அவை உறுப்பினராகவும் தொடர்வார்.
  • கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், கியூபா அரசினுடைய தலைவராகவும் இருவேறு நபர்கள் இருப்பது கியூபாவில் இதுவே முதன் முறையாகும்.

   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்