TNPSC Thervupettagam

கிராஃபீன்-அரோரா திட்டம்

August 26 , 2023 329 days 240 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆனது, கொச்சியில் உள்ள மேக்கர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் ‘கிராஃபீன்-அரோரா திட்டத்தை’ அறிமுகப் படுத்தியது.
  • இந்தத் திட்டமானது கேரளாவின் எண்ணிமப் பல்கலைக்கழகத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இது ஆராய்ச்சிக்கும் வணிகமயமாக்கலுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாகச் செயல்படும்.
  • இது பல்வேறு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகள் கிராஃபீன் தொழில் நுட்பங்களை உருவாக்கி மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான வசதியை வழங்குகிறது.
  • கிராஃபீன் என்பது கிராஃபைட்டிலிருந்துப் பிரித்தெடுக்கப்படுகின்ற, தூய கார்பனால் ஆன கனிமமாகும்.
  • பென்சிலின் உள்ளக எழுதுகோல் போன்ற பல்வேறு அன்றாடப் பொருட்களில் நாம் பயன்படுத்தும் இயற்கையின் மிக முக்கியமான கூறுகளில் இதுவும் ஒன்றாகும்.
  • இது உலகின் மிக மெல்லிய, வலிமையான மற்றும் மின்சாரம் மற்றும் வெப்பம் ஆகிய இரண்டையும் கடத்தும் வகையிலான பொருளாகும்.
  • இது தாமிரத்தை விட அதிகளவில் மின்சாரத்தைக் கடத்துகிறது.
  • இது எஃகினை விட 200 மடங்கு வலிமையானது ஆனால் ஆறு மடங்கு இலகுவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்