TNPSC Thervupettagam

கிராமப்புற இந்தியாவில் தொடக்கக் கல்வி நிலை 2023

August 13 , 2023 344 days 217 0
  • சமீபத்தில், மத்தியக் கல்வித் துறை அமைச்சகமானது இந்தியாவில் முதல் முறையாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • கிராமப்புறச் சமூகங்களில் உள்ள 6 வயது முதல் 16 வயது வரையிலான குழந்தைகளை மையமாக வைத்து இந்த மதிப்பாய்வு நடத்தப்பட்டது.
  • இது மாணவர்களிடையே திறன்பேசிகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதை எடுத்து உரைக்கிறது.
  • இது கிராமப்புற இந்தியாவினை மாற்றியமைத்தல் என்ற தன்னார்வ நிறுவனம் மற்றும் சம்போதி ரிசர்ச் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான சிறந்த ஒத்துழைப்பினைக் கொண்டு, மேம்பாட்டுத் தகவல் வழங்கீட்டு மையம் (DIU) நடத்திய ஆய்வின் அடிப்படையில் கூறப்படுகிறது.
  • இந்த மதிப்பாய்வின் படி, ஆண் குழந்தைகளில் நான்கில் ஒரு பகுதியினர் ஆரம்பப் பள்ளிக் கல்வியின் போது பள்ளிப் படிப்பில் இருந்து விலகியுள்ளனர்.
  • இந்த வயது கட்டத்தில் பதிவான பள்ளிக்கல்வி இடைநிற்றல் விகிதம் ஆனது கிட்டத்தட்ட 35 சதவீதத்துடன் பெண் குழந்தைகள் மத்தியில் அதிகமாக இருந்தது.
  • இதன்படி முக்கியத் தகவல்கள்:
    • 49.3% பேர் திறன்பேசிகளை அணுகுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
    • அதே சமயம், சுமார் 34% மாணவர்கள் மட்டுமே கல்விப் படிப்பு தொடர்பான தரவுப் பதிவிறக்கங்களுக்காக திறன்பேசிகளைப் பயன்படுத்துகின்றனர்.
    • உயர் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் (8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பில் பயில்பவர்கள்) திறன்பேசிகளை (58.32%) அதிக அளவில் அணுகும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
    • 78% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட நிலையிலான கல்வியைப் பெற வேண்டும் என்ற ஆசை கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்