TNPSC Thervupettagam

கிராமப்புற சுகாதாரத்திற்கான தூய்மை இந்தியா விருது – தமிழ்நாடு

October 4 , 2019 1884 days 967 0
  • மத்திய அரசின் கிராமப்புறத் தூய்மைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு கிராமப்புற சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழ்நாடு 11வது இடத்தில் இருந்தது. தற்பொழுது இந்தக் கணக்கெடுப்பில் இது முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.
  • நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரான எஸ்.பி. வேலுமணி மாநில அரசின் சார்பாக பிரதமர் மோடியிடமிருந்து இந்த விருதைப் பெற்றார்.
  • இந்த ஆண்டில் ஸ்வச்தா கணக்கெடுப்பானது நாடு முழுவதும் 17,200 கிராமங்களிலும் 690 மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.
  • மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்கள், சுயாதீன மதிப்பீட்டாளர்களின் கண்காணிப்பு முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • தூய்மை இந்தியா திட்டத்தின் (Swachh Bharat Mission - SBM) வலைத் தளத்தின் படி, தமிழ்நாடானது 100 சதவிகிதம் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற (Open Defecation Free - ODF) மாநிலம் என்ற நிலையை அடைந்துள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி தூய்மை இந்தியா என்ற திட்டத்தை  அறிவித்ததை அடுத்து மாநிலத்தில் 53.46 லட்சத்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக அந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்