TNPSC Thervupettagam

கிராமப்புற பாரம்பரிய மற்றும் மேம்பாட்டிற்கான இந்திய அறக்கட்டளை (ITRHD)

July 24 , 2018 2187 days 722 0
  • கிராமப்புற பாரம்பரிய மற்றும் மேம்பாட்டிற்கான இந்திய அறக்கட்டளையின் (ITRHD - Indian Trust for Rural Heritage and Development) 7வது வருட பொதுக் குழு சந்திப்பு புதுதில்லியில் நடைபெற்றது.
  • இது கிராமப்புற இந்தியாவில் உள்ள இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இந்தியாவில் 7 மாநிலங்களில் இந்த அமைப்பு தனது பணியினை மேற்கொண்டு வருகிறது.
  • ஜார்க்கண்டில் உள்ள மலுட்டி, தும்கா ஆகிய கிராமங்களில் உள்ள 17 முதல் 19 நூற்றாண்டுகள் காலத்திற்குட்பட்ட டெரகோட்டா ஆலயங்களைப் பாதுகாப்பது ஆகிய பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது.
  • ’மலுட்டி திட்டம்’ பிரதம அமைச்சர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அங்கு உள்ள 108 ஆலயங்களில் பாழடைந்த நிலையிலுள்ள 62 ஆலயங்களைப் பாதுகாப்பது இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்