கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வசதி
December 24 , 2024 13 hrs 0 min 66 0
மத்திய அரசானது, முழுமையாக ஒரு குடிநீர் குழாய் இணைப்பு வசதியினைப் பெறாத கிராமப்புற வீடுகளைக் கொண்டுள்ள மாநிலங்களில் அந்த வசதிகளை ஏற்படுத்தச் செய்வதற்காக அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சுமார் 79% (15,37,22,950) கிராமப்புறக் குடும்பங்களுக்கு இதுவரையில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
19 கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்கள் இந்த வசதி வழங்கீட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாநிலங்களில், மேற்கு வங்காளம் 53.9% என்ற குறைவான குடிநீர் குழாய் இணைப்பு வசதியினைக் கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து கேரளா 54.13%, ஜார்க்கண்ட் 54.62% மற்றும் இராஜஸ்தான் 54.95% இடம் பெற்றுள்ளன.
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், பதினொரு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் முழுமையான 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பினைப் பெற்றுள்ளன.