கிராமப்புற விளையாட்டுகளின் முதல் பதிப்பு எனப்படும் கிராமின் கேல் மஹோத்சவ் ஆகஸ்டு 28 முதல் செப்டம்பர் 3 வரை டெல்லியில் துவங்க உள்ளது.
இதன் நோக்கம் நமது மரபார்ந்த விளையாட்டுகளான மல்யுத்தத்தையும் தடகளப்போட்டிகளையும் பிரபலப்படுத்துவது ஆகும். இதில் மூத்தோர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியும், மட்கா பந்தயமும் அடங்கும்.
மத்திய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் திறமை வாய்ந்த விளையாட்டுகளுக்கான தேடல் இணைய தளத்தையும் துவங்க உள்ளது.
இந்த தளம் மூலம் எந்தவொரு நபரும் நாட்டின் எந்தவொரு மூலையிலிருந்தும் அவர்களது தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியும். இதன் மூலம் அமைச்சகம் அவர்களது திறன்களை கண்டறிந்து அவர்களுக்கு அவரவர் துறைகளில் பயிற்சியளித்து மேம்படுத்த முடியும்.