TNPSC Thervupettagam
February 11 , 2024 141 days 400 0
  • 66வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழாவானது (2024) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
  • இந்திய இசைக் கலைஞர்களான சங்கர் மகாதேவன் மற்றும் ஜாகிர் ஹுசைனின் கலப்புப் பாடல் இசைக் குழுவான ‘சக்தி’ ‘சிறந்த உலகளாவிய இசைத் தொகுப்பு’ என்ற பிரிவில் கிராமி விருதைப் பெற்றுள்ளது.
  • ஜாகிர் ஹுசைன் 'பஷ்டோ' மொழியில் தான் வழங்கியப் பங்களிப்பிற்காக 'சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி' என்ற பிரிவில் கிராமி விருதை பெற்றுள்ளார்.
  • முன்னணி கிராமி விருதுகள்
    • ஆண்டின் சிறந்த பாடல் தொகுப்பு - டெய்லர் ஸ்விஃப்ட், மிட்நைட்ஸ்
    • ஆண்டின் சிறந்த பாடல் பதிவு - மைலி சைரஸ், ஃபிளவர்ஸ்
    • ஆண்டின் சிறந்த பாடல் - பில்லி எலிஷ், வாட் ஐ வாஸ் மேட் ஃபார்?
    • சிறந்த புதுமுகக் கலைஞர் - விக்டோரியா மோனெட்
  • டெய்லர் ஸ்விஃப்ட், ஆண்டின் சிறந்த பாடல் தொகுப்பிற்கான விருதினை நான்கு முறை வென்ற முதல் கலைஞர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • தென்னாப்பிரிக்கப் பாடகி டைலா சிறந்த ஆப்பிரிக்க இசை நிகழ்ச்சி என்ற முதல் விருதைப் பெற்று வரலாறு படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்