கிராம் சம்ரிதி இவம் சுவச்சதா பாக்வதா- Oct 1 to Oct 15
October 23 , 2017 2638 days 945 0
மாநில அரசாங்கள் மற்றும் பிற துறைகளுடன் இணைந்து ஊரக வளர்ச்சித் துறையானது நடப்பு ஆண்டில் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 15 வரை கிராம் சம்ரிதி இவம் சுவச்சதா பாக்வதா என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
கிராம சபை கூட்டமானது நாட்டின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் அக்டோபர் 2 தேதி அன்று நடத்தப்பட்டது.
பாக்வதா தனிச்சிறப்பு வாய்ந்த இரு கூறுகளை உடையது,
கிராம சபை சந்திப்பை ஏற்படுத்துதல், தூய்மைக்கான பிரச்சாரம் மேற்கொள்ளுதல், நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்துகளில் அமல்படுத்தப்பட உள்ள அரசின் பல்வேறு திட்டங்களைப் பற்றிய பொதுத் தகவல்களை எடுத்து கூறுதல்.
அந்தோதயா திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய 50,000 கிராம பஞ்சாயத்துகளை அடிப்படை தரவரிசைப்படுத்துதல்.
இந்த காலத்தில் திசா கண்காணிப்பு இணைவாயில் மற்றும் கிராம் சம்வாத் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திசா கண்காணிப்பு இணையவாயில் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய தொகுதியில் அமல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு மத்திய நிதியுதவி திட்டங்களின் செயல்பாட்டு முன்னேற்றங்களைக் கண்காணிக்க உதவும்.
கிராம் சம்வாத் கைபேசி செயலியானது குடிமக்கள் பஞ்சாயத்து அளவிலான ஊரக வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் அவற்றின் நடைமுறை செயல்படுத்துகைப் பற்றியும் தகவல்களை அறிய உதவும்.
கிராம்சம்ரிதிஇவம்சுவச்சதாபாக்வதா
அனைத்து சமூகத்தினுடைய பங்கேற்போடு குறிப்பாக பெண்கள் மற்றும் இளையோர்களின் பங்கேற்போடு கிராம பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டத்தை உருவாக்க மேற்கொள்ளப்படும் ஓர் அவை முயற்சியே கிராம சம்ரிதி இவம் சுவச்சதா பாக்வதா ஆகும்.
பல்வேறு அமைச்சரகங்கள் மற்றும் துறைகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களினுடைய வருடாந்திர செயல் திட்ட இறுதி தயாரிப்பில் கிராம சபைகளால் உருவாக்கப்பட்ட இந்த திட்டங்களின் பரிந்துரைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.