தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள 9,624 கிராமப் பஞ்சாயத்துகள், 314 பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் 28 மாவட்டப் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வேண்டிய சிறப்பு அதிகாரிகளை (SO) நியமித்துள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் (RLBs) தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் ஆனது ஜனவரி 05 ஆம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு என்பது மேற்கொள்ளப்பட்டது.
அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO - கிராமப் பஞ்சாயத்துகள்) அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
அதே போல், அந்தந்த மாவட்டங்களில் உள்ள RD&PR துறையில் உள்ள (பஞ்சாயத்துகள்) மற்றும் (தணிக்கை) பிரிவுகளின் உதவி இயக்குநர்கள் ஊராட்சி ஒன்றியங்களுக்கு SO அதிகாரிகளாக பணியாற்றுவார்கள்.
இதில் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமைகளின் கூடுதல் ஆட்சியர்கள் அல்லது கூடுதல் இயக்குநர்கள் அல்லது இணை இயக்குநர்கள் அல்லது திட்ட இயக்குநர்கள் மாவட்டப் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.