TNPSC Thervupettagam

கிராம ஊராட்சிகளுக்கான சிறப்பு அலுவலர்கள்

January 8 , 2025 14 days 99 0
  • தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள 9,624 கிராமப் பஞ்சாயத்துகள், 314 பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் 28 மாவட்டப் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வேண்டிய சிறப்பு அதிகாரிகளை (SO) நியமித்துள்ளது.
  • ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் (RLBs) தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் ஆனது ஜனவரி 05 ஆம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு என்பது மேற்கொள்ளப்பட்டது.
  • அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO - கிராமப் பஞ்சாயத்துகள்) அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
  • அதே போல், அந்தந்த மாவட்டங்களில் உள்ள RD&PR துறையில் உள்ள (பஞ்சாயத்துகள்) மற்றும் (தணிக்கை) பிரிவுகளின் உதவி இயக்குநர்கள்  ஊராட்சி ஒன்றியங்களுக்கு SO அதிகாரிகளாக பணியாற்றுவார்கள்.
  • இதில் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமைகளின் கூடுதல் ஆட்சியர்கள் அல்லது கூடுதல் இயக்குநர்கள் அல்லது இணை இயக்குநர்கள் அல்லது திட்ட இயக்குநர்கள் மாவட்டப் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்