கிரிக்கெட் போட்டியில் சாதனைகள் – மேற்கு இந்தியத் தீவுகள் & இங்கிலாந்து
March 2 , 2019 2098 days 638 0
உலகில் 500 சிக்சர்களை அடித்த முதல் வீரராக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் உருவெடுத்திருக்கின்றார்.
10,000 ரன்களை அடைந்த வகையில் பிரையன் லாராவிற்கு அடுத்த இரண்டாவது கரிபீய வீரராகவும் உலகளவில் 14வது வீரராகவும் கெயில் உருவெடுத்திருக்கின்றார்.
2013 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் அடித்த 38 சிக்சர்கள் என்ற முந்தைய சாதனையை தற்சமயம் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணி வீரர்களும் சேர்ந்து மொத்தம் 46 சிக்சர்களை அடித்து முறியடித்துள்ளனர்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி 24 சிக்சர்களை அடித்துள்ளது. இது ஒரு நாள் போட்டிகளில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும். அவர்கள் இத்தொடரின் முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அடித்த 23 என்ற எண்ணிக்கையைத் தாண்டினர்.
மேற்கு இந்தியத் தீவுகளின் கிரேனடாவில் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 532 ரன்கள் பவுண்டரிகள் மூலம் வந்தன. இது நாள் வரையில் ஒரு ஆட்டத்தில் அதிகமான ரன்கள் பவுண்டரிகள் மூலம் அடிக்கப்பட்டது இதுவேயாகும்.
ஆறாயிரம் ரன்களை ஒருநாள் போட்டிகளில் அடித்த முதல் இங்கிலாந்து அணி வீரராக மார்கன் சாதனை படைத்திருக்கின்றார்.