TNPSC Thervupettagam
April 11 , 2019 1936 days 532 0
  • சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தியதற்காக, தொடர்ந்து மூன்றாவது முறையாக விஸ்டெனின் “ஆண்டின் முன்னணி கிரிக்கெட் வீரராக” கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பெண்களுக்கான “ஆண்டின் முன்னணி கிரிக்கெட் வீரராக” ஸ்மிரிதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • தொடர்ந்து இரண்டாவது முறையாக “ஆண்டின் 20 ஓவர் முன்னணி கிரிக்கெட் வீரராக” ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • விஸ்டன் கிரிக்கெட் வீரர்களின் அலமன்க்கின் 156-வது பதிப்பின் வெளியீட்டின் போது இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.
விஸ்டன் அலமன்க்
  • விஸ்டன் கிரிக்கெட் வீரர்களின் அலமன்க் அல்லது பொதுவாக விஸ்டன் என்பது ஐக்கிய இராஜ்ஜியத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் ஒரு கிரிக்கெட் குறிப்புரைப் புத்தகமாகும்.
  • விஸ்டனானது இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஜான் விஸ்டனால் (1826-84) 1864 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
  • இன்றைய காலகட்டத்தில் இதன் வருடாந்திர வெளியீடானது எவ்வித தடையுமின்றித் தொடர்கிறது. இது நீண்ட காலமாக விளையாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவதால் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
  • 2012 ஆம் ஆண்டில், விஸ்டன் விளையாட்டு வீரர்கள் அலமன்க்கின் இந்தியப் பதிப்பானது தொடங்கப்பட்டது (2013).
  • முந்தைய கோடைக் காலத்தின் போது இங்கிலாந்தில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களைக் கௌரவிப்பதற்காக 1889 ஆம் ஆண்டில் “ஆண்டின் கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை” விஸ்டன் அறிமுகப் படுத்தியது.
  • ஒரு வீரர் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இந்த விருதைப் பெற முடியும்.
  • வெற்றிகளின் எண்ணிக்கையின் மீது எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல் சர்வதேச விளையாட்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களை “ஆண்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகள்” கௌரவிக்கிறது. இது சமீபத்தில் இருந்து தான் வழங்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்