மத்திய அரசானது கிரித் பரிக் தலைமையிலான ஒரு குழுவைச் சமீபத்தில் அமைத்தது.
திரவமாக்கப்பட்டப் பெட்ரோலிய எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்துவதையும், அதனைக் குறைப்பதையும் இது நோக்கமாக உள்ளது.
நகர எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், பொது எரிவாயு நிறுவனமான GAIL இந்தியா லிமிடெட், இந்தியன் எண்ணெய் உற்பத்திக் கழகம் மற்றும் உரத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம் பெற்று உள்ளனர்.
இந்தக் குழு வீட்டு உபயோக எரிவாயு உற்பத்திக்காக வேண்டி சிறந்த விலைக்கானச் சூத்திரத்தை முடிவு செய்ய உள்ளது.
ONGC மற்றும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் எரிவாயு விலையை நிர்ணயம் செய்வதற்கானச் சூத்திரத்தையும் இந்தக் குழு ஆய்வு செய்ய உள்ளது.