இந்திய விமானப்படை வானிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கினைத் தாக்கி அழிக்கும் நடுத்தர தொலைவு வரம்பு கொண்ட புதிய வடிவ ஏவுகணையின் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
இது 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணை ROCKS அல்லது கிரிஸ்டல் மேஸ் 2 என்றும் குறிப்பிடப்படுகிறது.
இதன் முன்னோடியான கிரிஸ்டல் மேஸ் 1 இஸ்ரேலில் இருந்து பெறப்பட்டு இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது.