TNPSC Thervupettagam

கிரீன்லாந்து - உலகளாவிய முக்கியத்துவம்

January 16 , 2025 4 days 68 0
  • கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவு என்பதோடு மற்றும் புவியியல் ரீதியாக வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகும்.
  • இந்த ஆர்க்டிக் தீவு ஆனது டென்மார்க் நாட்டின் இரண்டு தன்னாட்சிப் பிரதேசங்களில் ஒன்றாகும் என்ற நிலையில் இதில் மற்றொன்று பரோயே தீவுகள் ஆகும்.
  • 2009 ஆம் ஆண்டு முதல், கிரீன்லாந்து அரசானது ஒரு வாக்கெடுப்பு மூலம் சுதந்திரத்தை அறிவிப்பதற்கான உரிமையினைக் கொண்டுள்ளது.
  • 80 சதவீதம் பனியால் மூடப்பட்டிருக்கும் இது அமெரிக்க தலைநகரிலிருந்து சுமார் 3,000 கிலோ மீட்டர் (1,864 மைல்) தொலைவில் உள்ளது.
  • கிரீன்லாந்தில் சுமார் 56,000 குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர் என்ற ஒரு நிலையில்  அவர்களில் பெரும்பாலோனோர் இனுயிட் பழங்குடியின மக்கள் ஆவர்.
  • ஐரோப்பிய ஆணையத்தினால் "முக்கிய மூலப்பொருட்கள்" என்று கருதப்படும் 34 தாதுக்களில் 25 தாதுக்கள் கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • கிரீன்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் நாடு அல்ல, ஆனால் அது நேட்டோ நாடுகளில் அங்கம் வகிக்கும் பகுதியாகும்.
  • கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஐக்கியப் பேரரசினை இணைக்கும் கடல் பரப்பில் ரேடார்களை வைப்பதன் மூலம் கிரீன்லாந்தில் தனது ராணுவ இருப்பை மிக நன்கு விரிவுபடுத்துவதில் அமெரிக்கா ஆர்வம் தெரிவித்துள்ளது.
  • கிரீன்லாந்து வட அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்குப் பயணிப்பதற்கான குறுகிய தொலைவு கொண்ட பாதையை வழங்குகிறது.
  • இது அமெரிக்காவிற்கு அதன் ராணுவம் மற்றும் அதன் முக்கிய உந்துவிசை எறிகணை தாக்குதல்களுக்கான முன்னெச்சரிக்கை அமைப்புக்கு ஒரு முக்கிய உத்தி சார் மேலாதிக்கத்தை அளிக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்