இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்திற்கு (Indian Renewable Energy Development Agency Limited – IREDA) இந்திய வர்த்தக சபையானது (Indian Chamber of Commerce – ICC) “கிரீன் உர்ஜா”என்ற விருதினை வழங்கியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களுக்கான நிதியியல் நிறுவனங்கள் மத்தியில் இந்த ஆண்டினுடைய முன்னணிப் பொதுத்துறை நிறுவனமாக விளங்குவதற்காக இந்த நிறுவனத்திற்கு இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
பசுமை ஆற்றலுக்கு நிதி வழங்குதலில் தான் ஆற்றும் முக்கிய மற்றும் மேன்மையான பங்கிற்காக IREDA (Indian Renewable Energy Development Agency Ltd) நிறுவனமானது இந்த விருதினைப் பெறுகிறது.
பிரதமரின் மதிப்புமிகு ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் நோக்கத்தினுடைய பக்கபலத்துடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் மேம்பாட்டிற்கான மகத்தான பங்களிப்பிற்கு இந்த விருதானது அங்கீகாரம் அளிக்கிறது.