TNPSC Thervupettagam

கிருஷ்ணதேவராயரின் இறப்பிற்கான முதலாவது கல்வெட்டு ஆதாரம்

March 4 , 2021 1271 days 723 0
  • இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்தைச்  சேர்ந்த அதிகாரிகள் கிருஷ்ண தேவராய நாயக்கரின் இறப்பிற்கான முதலாவது கல்வெட்டு ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளனர்.
  • இவர் துளுவ வம்சத்தைச் சேர்ந்த மூன்றாவது ஆட்சியாளர் ஆவார்.
  • இவர் 1509-1529 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் விஜயநகரப் பேரரசின் அரசராக விளங்கினார்.
  • இந்தக் கல்வெட்டானது தும்கூர் மாவட்டத்தில் ஹோனன்னஹல்லியில் உள்ள கோபால கிருஷ்ண ஆலயத்திற்கு அருகில் கண்டெக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் கல்வெட்டின்படி, 1529 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று கிருஷ்ண தேவராயர் இறந்தார்.
  • தெற்கிலிருந்து ஆட்சி செய்த மிகவும் புகழ்பெற்ற ஆட்சியாளர்களில் அவர் ஒருவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்