பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தியும் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் விருந்தாவன் என்ற இடத்தில், 1000 விதவைகளுக்கான சிறப்பு காப்பகமாக ‘கிருஷ்ணா குடிர்’ என்ற காப்பகத்தை திறந்து வைத்தார்கள்.
இது ஸ்வதார் கிரேஹ் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டதாகும்.