TNPSC Thervupettagam
February 23 , 2018 2369 days 724 0
  • இஸ்லாமிய பெரும்பான்மை நாடான பாகிஸ்தானின் செனட் அவைக்கு இரண்டாவது பெண் செனட் உறுப்பினராக பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமாரி கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இதுவரை பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் (PPP-Pakistan People’s Party) சேர்ந்த ரத்னா பகவன்தாஸ் சாவ்லா மட்டுமே பாகிஸ்தான் செனட்டின் ஒரே இந்து பெண் உறுப்பினராக இருந்து வருகிறார்.
  • பாகிஸ்தானின் செனட் அவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பாகிஸ்தானிய தலித் சமூகப் பெண் கிருஷ்ணா குமாரி கோலி ஆவார்.
  • சிந்து சட்டமன்றப் பேரவையிலிருந்து செனட் அவைக்கான சிறுபான்மையினர் இடத்தில் ஆளும் கட்சியான PPPஆல் நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகுமாரியின் ஆவணங்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
  • பாகிஸ்தான் அட்டவணை சாதிகள் அவசரச் சட்டம் 1957-ன் அட்டவணை எண்-23ல் கிருஷ்ண குமாரி கோலியின் சாதி குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்