காங்கிரஸ் அரசின் ‘கிருஹ லட்சுமி’ என்ற திட்டத்தில் பதிவு செய்வதற்கானச் செயல் முறையைக் கர்நாடக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் மாதாந்திர உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்குவதற்கான ஒரு திட்டமாகும்.
வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மற்றும் வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அல்லது அவர்களின் கணவர்கள் வரி செலுத்தும் வரம்புக்குட்படாதவரை இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியுடையவர் ஆவர்.