TNPSC Thervupettagam

கிரெம் புரி

March 26 , 2018 2467 days 901 0
  • கிரெம் புரி எனப் பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மணற்கல் குகை மேகாலயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • காசி மொழியில் கிரெம் என்றால் குகை எனப் பொருள்.
  • மேகாலயாவின் கிழக்கு காசி குன்றுகள் மாவட்டத்திலுள்ள மாசின்ராம் பகுதியில் அமைந்துள்ள லெய்ட்சோஹம் என்ற கிராமத்திற்கருகே 24,583 மீட்டர்கள் நீளமுடைய இந்த குகை அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இதன் நீளம்5 கி.மீ. இது ஏறக்குறைய ஏவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட மூன்று மடங்கு. 66 – 76 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரஸ் புதை படிவங்கள் இந்த குகையில் காணப்படுகின்றன.
  • இதற்கு முன்னர், வெனிசுலா நாட்டின் எடோ சுலியா பகுதியில் அமைந்துள்ள கியூவா டெல் சமான் குகையானது உலகின் மிக நீளமான மணற்கல் குகை என்ற பெருமையைப் பெற்றிருந்தது. 18,200 மீட்டர்கள் (18.2 கி.மீ) நீளமுடைய இக்குகை குவாட்சைட் மணற்கற் குகையாகும்.
  • டைனோசரஸ் புதை படிவங்கள் காணப்படும் உலகின் நீளமான மணற்கல் குகைகளில் மொசாசவ்ரஸின் புதை படிவங்களும் அடங்கும்.
  • மொசாசவ்ரஸ் என்பது . 66 – 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து அழிந்து போன நீர்வாழ் ஊன் உண்ணி பல்லிகளாகும்
  • பொதுவாக மேகாலயா இந்தியாவின் மிக நீளமான குகைகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது. கிரெம் லியாட் பிரா – உமிம் – லபிட் சுண்ணாம்புக்கல் குகை அமைப்பு ஜெயிந்தியா குன்றுகளில் அமைந்துள்ளது. இதன் நீளம் கி.மீட்டருக்கும் மேலானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்