35 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட 2023 ஆம் ஆண்டு கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பின் போது மேற்கு வங்காளத்தில் அதிக எண்ணிக்கையிலான பறவை இனங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் பதிவு செய்யப் பட்டு உள்ளன.
BCI (Bird Count India – இந்தியப் பறவைகள் கணக்கெடுப்பு) என்பது பறவைகளின் பரவல் மற்றும் எண்ணிக்கை பற்றிய ஒட்டு மொத்தத் தகவல்களை அதிகரிக்கச் செய்திட வேண்டி இணைந்து செயல்படும் நிறுவனங்கள் மற்றும் குழுக்களின் ஒரு முறை சாராக் கூட்டாண்மை ஆகும்.
2023 ஆம் ஆண்டு கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்ற 190 நாடுகளில் இந்தியாவும் அடங்கும்.
இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற 35 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மேற்கு வங்காளத்தில் மிக அதிகமான அளவில் 489 இனங்கள் பதிவாகியுள்ளன.
உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முறையே 426, 407, 397 மற்றும் 371 இனங்களைக் கொண்டுள்ளன.
தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை 349 மற்றும் 325 இனங்களுடன் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களைப் பெற்றன.
இருப்பினும், 9,768 பட்டியல்களுடன் தனது பறவைகள் பட்டியலில் எண்ணிக்கையினை பதிவேற்றி, மறு சரிபார்ப்புப் பட்டியல் பிரிவில் கேரளா முதலிடத்தைப் பிடித்தது.
மகாராஷ்டிரா 7,414 பட்டியல்களுடனும், தமிழ்நாடு 6,098 பட்டியல்களுடனும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன.
கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பானது 1998 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
Bird Count India என்ற அமைப்பானது இந்தியாவில் கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பினை ஏற்பாடு செய்கிறது.