TNPSC Thervupettagam

கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பு 2023

February 28 , 2023 507 days 310 0
  • 35 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட 2023 ஆம் ஆண்டு கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பின் போது மேற்கு வங்காளத்தில் அதிக எண்ணிக்கையிலான பறவை இனங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் பதிவு செய்யப் பட்டு உள்ளன.
  • BCI (Bird Count India – இந்தியப் பறவைகள் கணக்கெடுப்பு) என்பது பறவைகளின் பரவல் மற்றும் எண்ணிக்கை பற்றிய ஒட்டு மொத்தத் தகவல்களை அதிகரிக்கச் செய்திட வேண்டி இணைந்து செயல்படும் நிறுவனங்கள் மற்றும் குழுக்களின் ஒரு முறை சாராக் கூட்டாண்மை ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டு கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்ற 190 நாடுகளில் இந்தியாவும் அடங்கும்.
  • இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற 35 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மேற்கு வங்காளத்தில் மிக அதிகமான அளவில் 489 இனங்கள் பதிவாகியுள்ளன.
  • உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முறையே 426, 407, 397 மற்றும் 371 இனங்களைக் கொண்டுள்ளன.
  • தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை 349 மற்றும் 325 இனங்களுடன் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களைப் பெற்றன.
  • இருப்பினும், 9,768 பட்டியல்களுடன் தனது பறவைகள் பட்டியலில் எண்ணிக்கையினை பதிவேற்றி, மறு சரிபார்ப்புப் பட்டியல் பிரிவில் கேரளா முதலிடத்தைப் பிடித்தது.
  • மகாராஷ்டிரா 7,414 பட்டியல்களுடனும், தமிழ்நாடு 6,098 பட்டியல்களுடனும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன.
  • கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பானது 1998 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • Bird Count India என்ற அமைப்பானது இந்தியாவில் கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பினை ஏற்பாடு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்