TNPSC Thervupettagam

கிரையோஜெனிக் இயந்திரத்திற்கான தகுதிச் சோதனைகள்

January 17 , 2022 952 days 444 0
  • ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் இயந்திரத்தின் தகுதிச் சோதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • தமிழகத்தில் உள்ள  மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ உந்துவிசை சோதனை வளாகத்தில் 720 வினாடிகள் வரை இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
  • ககன்யான் திட்டத்திற்காக மனிதனால் மதிப்பிடப்பட்ட ஒரு ஏவுகணை வாகனத்தில் பொருத்தப் படுவதற்காக  கிரையோஜெனிக் இயந்திரத்தின் நம்பகத் தன்மையையும் உறுதித் தன்மையையும் இது உறுதி செய்துள்ளது.
  • ககன்யான் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவுகலமான (ஜிஎஸ்எல்வி) மார்க் III ஏவு கலமானது இரண்டு கிரையோஜெனிக் இயந்திரங்களைப் பயன்படுத்த உள்ளது.
  • இது இஸ்ரோவால் உருவாக்கப்பட்டதோடு இதற்கு விகாஸ் என்றும் பெயரிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்