TNPSC Thervupettagam
December 11 , 2018 2095 days 575 0
  • ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO - Food and Agriculture Organization) தலைமையகமான ரோமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018 ஆம் ஆண்டின் கிலின்கா உலக மண் விருதை ரத்தன் லால் வென்றுள்ளார்.
  • நீடித்த மண் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக ரத்தன் லாலுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் ஓகியோ மாகாணப் பல்கலைக்கழகத்தில் மண் அறிவியல் துறையின் புகழ்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர் ஆவார். மேலும் இவர் சர்வதேச மண் அறிவியல் மன்றத்தின் (IUSS - the International Union of Soil Science) தலைவராகவும் உள்ளார்.
  • இரஷ்யாவின் முன்னோடி அறிவியலாளரான கொன்ஸ்டான்டின் டி. கிலின்கா என்பவரது நினைவாக கிலின்கா உலக மண் விருது என்று இவ்விருதுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விருது மண் அறிவியல் துறையின் உயரிய விருதாகவும் கருதப்படுகிறது.
  • இவர் உலகின் மிகவும் செல்வாக்கான அறிவியல் அறிவு உள்ளவர்கள் பட்டியலில் (2012) இடம் பெற்றுள்ளார். மேலும் வேளாண் துறையின் அனைத்து ஆராய்ச்சியாளர்களிலும் முதன்மை விஞ்ஞானிகளின் 1 சதவீதத்திற்குள் இவர் இடம் பிடித்துள்ளார்.
  • 2017 ஆம் ஆண்டில் உலக மண் தினத்தை சிறப்பாக ஒருங்கிணைத்ததற்காக வங்க தேசத்தின் “நடைமுறை நடவடிக்கை” என்ற செயல்முறைக்கு முதலாவது உலக மண் தின விருது வழங்கப்பட்டுள்ளது.
  • FAO-ஆல் புதிதாக உருவாக்கப்பட்ட இவ்விருதானது தாய்லாந்தால் நிதியளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்