கில்காரி திட்டம், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளூர் பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்காகச் சமீபத்தில் தொடங்கப்பட்ட கைபேசி சுகாதார நலச் சேவை (m-health) முன்னெடுப்பு ஆகும்.
‘கில்காரி’ (‘குழந்தையின் ஓசை’ என்று பொருள்) என்பது ஒரு மையப்படுத்தப்பட்ட இரு வழித் தொடர்பிலான குரல்வழி செய்திகளை (IVR) வழங்கும் வகையிலான கைபேசி சுகாதார நலச் சேவையாகும்.
இது பயனாளிகளின் கைபேசிகளை கர்ப்பம், பிரசவம், குழந்தைப் பராமரிப்பு பற்றிய இலவச, வாராந்திர, நேரத்திற்குத் தகுந்த 72 ஒலி/ஒளி சார் செய்திகளை வழங்குகிறது.
தற்போது கில்காரி திட்டம் 18 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் செயல்படுத்தப் பட்டு வருகிறது.