TNPSC Thervupettagam

கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலம்

July 30 , 2024 117 days 168 0
  • பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் கனிமங்களை ஆராய்வதற்கான உரிமங்களுக்கு இந்தியா விண்ணப்பிக்க உள்ளது.
  • கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலத்தில் கவனம் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
  • இது ஹவாய் மற்றும் மெக்சிகோ இடையே உள்ள ஒரு பரந்த கடலடி சமவெளி ஆகும்.
  • இது மாங்கனீசு, நிக்கல், தாமிரம் மற்றும் கோபால்ட் போன்ற சில கனிமங்களைக் கொண்ட ஒரு பெரிய அளவிலான பல்கனிம நிறைவு பகுதிகளைக் கொண்டிருப்பதாக அறியப் படுகிறது.
  • சர்வதேச கடற்படுகை ஆணையம் (ISA) ஆனது, இந்தியப் பெருங்கடலில் இந்தியாவிற்கான இரண்டு உரிமங்களும் உட்பட 31 ஆழ்கடல் ஆய்வு உரிமங்களை வழங்கியுள்ளது.
  • ஆனால், 36 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பு ஆனது சில விதிமுறைகளில் மேலும் மாற்றங்களை மேற்கொள்ள முயல்வதால் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள இது இன்னும் அனுமதிக்கவில்லை.
  • சீனா, ரஷ்யா மற்றும் சில பசிபிக் தீவு நாடுகள் ஏற்கனவே பசிபிக் பெருங்கடலில் ஆய்வு மேற்கொள்வதற்கான உரிமங்களைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்