பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் கனிமங்களை ஆராய்வதற்கான உரிமங்களுக்கு இந்தியா விண்ணப்பிக்க உள்ளது.
கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலத்தில் கவனம் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இது ஹவாய் மற்றும் மெக்சிகோ இடையே உள்ள ஒரு பரந்த கடலடி சமவெளி ஆகும்.
இது மாங்கனீசு, நிக்கல், தாமிரம் மற்றும் கோபால்ட் போன்ற சில கனிமங்களைக் கொண்ட ஒரு பெரிய அளவிலான பல்கனிம நிறைவு பகுதிகளைக் கொண்டிருப்பதாக அறியப் படுகிறது.
சர்வதேச கடற்படுகை ஆணையம் (ISA) ஆனது, இந்தியப் பெருங்கடலில் இந்தியாவிற்கான இரண்டு உரிமங்களும் உட்பட 31 ஆழ்கடல் ஆய்வு உரிமங்களை வழங்கியுள்ளது.
ஆனால், 36 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பு ஆனது சில விதிமுறைகளில் மேலும் மாற்றங்களை மேற்கொள்ள முயல்வதால் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள இது இன்னும் அனுமதிக்கவில்லை.
சீனா, ரஷ்யா மற்றும் சில பசிபிக் தீவு நாடுகள் ஏற்கனவே பசிபிக் பெருங்கடலில் ஆய்வு மேற்கொள்வதற்கான உரிமங்களைப் பெற்றுள்ளன.